"காவிரிப் படுகையில் தமிழக மக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துரோகம்"

காவிரிப் படுகையில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துரோகம் இழைப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

காவிரிப் படுகையில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துரோகம் இழைப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசன் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் எனப் பெயரிட்டு, அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மதுரை பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் திருச்சியில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனிடையே, மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் வரும் 8-ஆம் தேதி பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி நிர்வாகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இறுதியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் உரையாற்றுகிறார். இதில், அவர் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பதாக கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு. இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...